http://www.siruvarulagam.com
சிறியோரும் பெரியோரும்
விரும்பும் இணையதளம்
     
செய்திகள்
கூடங்குளம்: தமிழக அரசு வல்லுனர் குழு அமைப்பு  -  முதல்வர் பற்றி அவதூறு பேட்டி விஜயகாந்த் மீது போலீசில் புகார்  -  தமிழக அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்  -  ஏப்ரல் 30ம் தேதி வரை திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு  -  அரசு காரை ஒப்படைத்தார் விஜயகாந்த்  -  தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு  -  கச்சத்தீவை மீட்கும் வரை தான் ஓயப் போவது இல்லை: ஜெ  -  சசிகலாவின் தம்பி திவாகரன் திருச்சியில் சிறையில் அடைப்பு  -  2ஜி: சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி  -  கருத்து கணிப்பில் தகவல் உபி.யில் தொங்கு சட்டசபை  -  தேர்தல் பிரசாரத்தின்போது முலாயம்சிங் மீது செருப்பு வீசிய பெண்  -  அசாமில் ஜெசிபி மீது ரயில் மோதி 3 பேர் பரிதாப பலி  -  சிரியா: துப்பாக்கிச் சூட்டில் போரட்டக்காரர்கள் 220 பேர் பலி  -  பி.சி.சி.ஐ. ஸ்பான்சரில் இருந்து சஹாரா விலகல்  -  ஐ.பி.எல். ஏலம்: ஜடேஜாவை ரூ. 9.72 கோடிக்கு வாங்கியது சென்னை  -  உலக கோப்பை ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்தியா  -  நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது  -  "சிறிலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படம் நோபல் பரிசுக்காக பரிந்துரை  -  வேட்டை மன்னனில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும்: சிம்பு  -  2ஜி உரிமம் ரத்து எதிரொலி: டெலிநார் வெளியேற முடிவு?  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் பழகுவோம்

பழமொழிகள்

ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.

ஏரி நிறைந்தால் கரை கசியும்.

ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.

ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.

ஏழை என்றால் எவர்க்கும் எளிது.

ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.

ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச் கோபம்.

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?

ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை

ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.

ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.




பழமொழிகள் : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20

இணைய பக்க முகவரி: http://www.siruvarulagam.com/tamil/proverbs6.html



பொழுது போக்கு
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs