பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
பழமொழிகள் கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே. கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம். கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை. கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள். கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும். கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர். கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம். கையிலே காசு வாயிலே தோசை. கையூன்றிக் கரணம் போடவேண்டும். கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா? கொடிக்கு காய் கனமா? கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம். கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது. கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை. கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு. கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா? கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா? கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான். கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது. கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன். கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை. கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு. கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது. கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு. கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு. கோபம் சண்டாளம். கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா? கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா? கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்? சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி. சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும். சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா? சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
|
எமது வலைதளங்கள் |