அம்மா1 : (இலக்கணம் - பெயர்ச்சொல்) (தொடர்புள்ள சொற்கள் : அன்னை, தாய்) 1. தாய் - Mother; என் தாய் சமையல் செய்கிறாள். 2. பெண்ணை குறிக்கும் மரியாதைச் சொல் - Term used to refer a woman; பக்கத்து வீட்டு அம்மாவைக் கேளுங்கள். / என்னம்மா இந்த முகவரி எங்கே உள்ளது? 3. தொழிலைக் குறிக்கும் பெயர் சொல்லுடன் மரியாதையாக சேர்ந்து வருவது அல்லது பெண்மையைக் குறிப்பது - suffix like 'ess' to denote a professional is a women or to give respect; டாக்டரம்மா எப்போது வருவார்? / வக்கீலம்மா வீடு எங்கே உள்ளது? 4. வயதில் மூத்த அல்லது உயர் நிலையில் உள்ளோர் இளம் பெண்களை அழைப்பது - elder or superior women call younger women; இந்தாம்மா இந்த வேலையை சீக்கிரம் முடி.

அம்மா2 : (இலக்கணம் - இடைச்சொல்) 1. வலியை வெளிப்படுத்த உதவும் சொல் - word used to express pain; மாடிப்படியிலிருந்து 'அம்மா' என்று கத்திக் கொண்டு விழுந்தான் சிறுவன்.